திருச்சி நீதிமன்றத்திற்கு 3 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்2 முறை இமெயில் வந்தும் அது எங்கிருந்து வந்தது என்று காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது ஏன்? குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் கேள்வி
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று வெள்ளிக்கிழமை (19/6/2026) திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு மூன்றாவது முறையாக இ- மெயிலில் பகிரங்க வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அனைவரும் அச்சத்தில் உள்ளனர் திருச்சி மாவட்ட வெடிகுண்டு நிபுணர்களின் உதவி ஆய்வாளர் அருவானந்தம் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழு இன்று நான்கு மணி நேரம் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நீதிமன்ற ஊழியர்கள் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்

வெங்கட் ஆகியோர் உடன் இருந்தனர்.பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்ற வளாகத்தில் அனைத்து இடமும் தேடிய பிறகு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று ஒப்புதல் கொடுத்து சென்றனர்.
மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளரை அழைத்து யார் இந்த இமெயிலை அனுப்புகிறார்கள் என்பதை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
காவல்துறைக்கு எங்களின் அன்பான வேண்டுகோள் இரண்டு முறை இமெயில் வந்தும் அது எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்காமல் இருப்பது ஏன் மேலும் இது ஒரு நீதிமன்றத்துக்கு வரும் ஒரு வழக்காடியின் செயலாக இருக்கலாம் அல்லது உண்மையாக மிரட்டல் ஆகவும் இருக்கலாம் இதை அலட்சிய படுத்தாமல் மேலும் இது திரும்பவும் தொடராமல் இருக்க திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் அவர்கள் இதை கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் வெளியீட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

