நடந்து முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட காலியாக உள்ள ஆறு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே ஜூன் 1ஆம் தேதி திருச்சி சென் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வருக்கு வெள்ளி செங்கோலை பரிசாக வழங்கிய வெல்லமண்டி நடராஜன்,மற்றும் அவரது மகன் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு போட்டோ எடுத்துக்கொண்டு வெற்றிக்குறி காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக வெல்லமண்டி நடராஜன் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் தமிழக அரசியலை தலைகீழாக்க, அதிமுகவிலிருந்து சாரை சாரையாக புறப்பட்டவர்கள் தவெக கதவைத் தட்ட, அரசியல் மேடை முழுவதும் புதிய கூட்டணிக் காற்று வீசுகிறது. இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல, சத்யபாமா, ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகினர். வெல்லமண்டி நடராஜன் இணைந்தது தவெகவிற்கு திருச்சியில் கூடுதல் பலம். அதிமுக கொடியைத் தாங்கி திருச்சியில் ஒருகாலத்தில் வெற்றி நடை போட்ட வெல்லமண்டி நடராஜன் 2016-ல்21,894 வாக்கு வித்தியாசத்தில் அதிரடியாக ஜெயித்த அதே திருச்சி கிழக்கு இப்போது மீண்டும் அவரை நோக்கி திரும்புகிறது. முதலில் திருச்சி கிழக்கில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட

கு.பா.கிருஷ்ணனுக்கு திடீரென வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டதால் அந்தத் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கும் வெல்லமண்டி நடராஜன் அல்லது அவரது மகன் வெல்லமண்டி ஜவஹர்லால் நேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை நாம் சந்தித்து இது குறித்து கேட்டபோது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது எந்த பதவியும் எதிர்பார்த்து அல்ல.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்று இராணுவ பட்டுப்பாடுடன் கட்சியை நடத்தி வருகிறார் தலைவர் விஜய்,இதை பார்த்துதான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தோம் .தற்போது அதிமுக தலைமை செயல்பாடுகள் சரியில்லைஎன்பதால் அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தோம்.திருச்சி கிழக்கு தொகுதியில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவோம் இல்லையென்றால் தமிழக வெற்றி கழகத்தில் யார் போட்டியிட்டாலும் அவரது வெற்றிக்காக உழைப்போம் .என்றும் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் என முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
தற்போது திருச்சியில் இளம் படைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார் முதல்வர் விஜய்,குறிப்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் (வயது 33) திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர பிரதாப் சிங், (வயது 31) திருச்சி எஸ்பி பிரவீண் உமேஷ் டோங்கரே, (வயது 39 )திருச்சி மாவட்ட வன அலுவலர் எஸ்.கிருத்திகா (வயது 33) ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் (வயது 31) இந்த பட்டியலில் கிழக்குத் தொகுதியிலும் ஒரு இளைஞருக்கே வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது அந்த வகையில் வெல்ல மண்டி நடராஜன் மகன் ஜவகர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது.

