காந்தி மார்க்கெட்டில் தொடரும் திருட்டு.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு .

திருச்சி அந்தநல்லூர் கடியாக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45) இவர் நேற்று முன்தினம் 17 ம் தேதி வேனில் வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்க்கு வந்து உள்ளார். பின் காந்தி மார்க்கெட்டில் வாழை இலையை இறக்கிவிட்டு வண்டியை அதே பகுதியில் நிறுத்திவிட்டு காந்தி மார்க்கெட் க்குள் சென்று விட்டு பிறகு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த வேனை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் அசோக்குமார் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரின் வேனை திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் காந்தி மார்க்கெட் பகுதியில் கடையை உடைத்து ரூ 78 ஆயிரம் மதிப்புள்ள பாதாம் முந்திரி மற்றும் ரொக்கம் ரூ.60 ஆயிரம் திருடி சென்ற மர்ம ஆசாமிகள் இதுவரை சிக்க வில்லை இந்த நிலையில் தற்போது இந்த வாகன திருட்டு நடைபெற்று உள்ளது.

