Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஏர்போர்ட் அருகே 9 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்றவரை ஜாமினில் விடுவித்த போலீசார்

0

'- Advertisement -

திருச்சியில்

Ad banner

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

திருச்சி ஏர்போர்ட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்து உள்ளது .

இதனை தொடர்ந்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் அங்கு சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு புகையிலைப் பொருட்கள் விற்ற திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா முகமது (வயது 41) என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்பது கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, அதோடு ரூபாய் 16 ஆயிரம் பணம் மற்றும் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. .வழக்கு பதிவு செய்த ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் ராஜா முகமது காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.