பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மனு
ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் :
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு, இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட கால ஊதியம், டெட் தேர்வு, கலந்தாய்வு மற்றும் 5400 தணிக்கைத் தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிக்கல்வி அமைச்சரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .
பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகனை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் பா ராஜாஜி தலைமையில் பொதுச் செயலாளர் சி அரசு, மாநில பொருளாளர் திருச்சி சே நீலகண்டன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து
ஆசிரியர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
அமைச்சர், மனுக்களை பெற்றுக் கொண்டு நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர்கள் முருகன், ஜெகநாதன் ரமேஷ், துரை பிரபாகர், சரஸ்வதி, தங்கராஜ், சேக் மூசா, பாரதி சிங்கம் , வடிவேல் மாவட்ட நிர்வாகிகள்
சந்திரசேகர், தாமரைச்செல்வன், ஆறுமுகம், செல்வம் , சிவக்குமார், திருமலைவாசன், திருத்தணிகைவேல், அறிவழகன் அண்ணாதுரை லிவிங்ஸ்டன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

