Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கருமண்டபம் டாஸ்மாக் கடையில்(10206) பாட்டிலுக்கு ரூ.10 கட்டாயா வசூல்.கேள்வி கேட்டால் அதிகாரிகளுக்கு வழங்கும் மாமுல் பட்டியலை கூறும் ஊழியர்கள். பாட்டிலுக்கு பத்து ரூபா என முதல்வர் பாடியதோடு சரியா?

0

'- Advertisement -

தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் நடைபெற்றது பிரச்சாரக் கூட்டத்தில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் பாடிய பாட்டிலுக்கு 10 ரூபா…பத்து ரூபா… பத்து ரூபா…பாட்டிலுக்கு 10 ரூபா!”இந்த வரிகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக வசூலிக்கப்படும் லஞ்சத் தொகையை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்தது.

Ad banner

தனது பிரச்சாரத்தின் போது பாட்டிலுக்கு பத்து ரூபாய் இல்ல ஆக்ரோசமாக பாடி பேசி ஆட்சிக்கு வந்த ஜோசப் விஜய் தற்போது அந்த குறைகளை நிவர்த்தி செய்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்காமல் செய்துள்ளாரா என்றால் சுத்தமாக இல்லை.

நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 10206 ல்

ஜிபே மூலம் சரக்கு வாங்கிய போது ஆப் சவாலியர் ரூ.500 + 10 ஸ்டிக்கர் மற்றும் குவாட்டர் எக்ஸ்பிரஸ் ரூ 140 + ரூ 10 ஸ்டிக்கர் ஆக மொத்தம் ரூ.660 க்கு அவர்கள் வாங்கியது ரூ.690 ஆக ரூ.30 கூடுதலாக வாங்கினார்கள்,எதற்காக பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று கேட்டதற்கு திருச்சி கலால் துறை அதிகாரிகளுக்கு,டாஸ்மாக் பொது மேலாளர்,மண்டல மேலாளர், ( DM & SRM )ஆனால் இரண்டு அதிகாரிகளும் நேர்மையானவர்கள் என கூறப்படுகிறது லோடுமேன் கூலி என பல செலவு உள்ளது, நீங்கள் எங்கு சென்று வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள்,வேண்டுமென்றால் வாங்கிச் செல்லுங்கள் இல்லை என்றால் போய்கிட்டே இருங்க ஏன் எதற்கு என்ற கேள்வி எல்லாம் எங்களிடம் கேட்கக் கூடாது என தெனாவட்டாக பேசினர் அந்த கடையில் உள்ள சூப்பர்வைசர் மற்றும் ஊழியர்கள்.அந்தக் கடையின் பார் ஊழியர்கள் சிலர் சென்று 10 ரூபாய் அதிகம் வாங்க வேண்டாமே என கூறிய போது உங்கள் வேலையை பாருங்கள் எனக் கூறி அனுப்பி விட்டனர்.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இந்த கடைக்கு சென்று வர 7 கிலோமீட்டர் ஆகிறது ,இதானல் பாட்டிலையும் திருப்பி கொடுக்க முடியாத சூழல்,இதனால் மத்திய பேருந்து நிலையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள தினக்கூலி மது பிரியர்களுக்கு தினமும் இருவது ரூபாய் நஷ்டம்.இது திருச்சியை சேர்ந்த துணை சபாநாயகர் மனமகிழ் மன்றங்களில் சென்று அங்கு 20% லாபம் வைத்து இருக்கலாம் என்ற விதிமுறையை கூட தெரியாமல் ஏன் பாட்டியலுக்கு 20 ரூபாய் அதிகம் வாங்குகிறீர்கள் என கேள்வி கேட்டார்,டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் அதிகம் வாங்குவது இவருக்கு தெரியாதா? அங்கு சென்று சோதனை மேற்கொண்டு கேள்வி கேட்க மாட்டாரா?

 

தமிழகத்தில் ஒரு நாள் விற்பனை ஆகும் பாட்டில்கள் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு கோடி x 10 ரூபாய் என்றால் பத்து கோடி ரூபாய், மாதம் 300 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம்.சரி அப்படி என்றால் டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் பத்து ரூபாய் வாங்குவதால் அவர்களுக்கு 300 கோடி ரூபாய் வருமானம் வருகிறது இந்த பணம் யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.

முதல்வர் ஜோசப் விஜய் ,அமைச்சர் கே.விக்னேஷ் நடவடிக்கை எடுப்பார்களா அல்லது திமுக ஆட்சி போன்று தானா ?

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.