Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி :ஹான்ஸ் விற்ற 2 பேர் கைது.10 பாக்கெட்டுகள் பறிமுதல்.

0

'- Advertisement -

திருச்சியில் புகையிலை விற்ற 2 பேர் கைது .

Ad banner

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக ஜியாபுரம் காவல் நிலைய போலீசார் கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்றுக்கொண்டிருந்த ஸ்ரீரங்கம் தாலுகா, கடியாக்குறிச்சி கிழக்குத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 5 ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், வளநாடு காவல் நிலைய போலீசார் கண்ணுக்குழி பஜார் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், அங்கு சட்டவிரோதமாக ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்த மருங்காபுரி தாலுகா, கொடும்பபட்டி கண்ணுக்குழியைச் சேர்ந்த முருகன் (வயது 64) என்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 5 ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.