Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மகேஷ் பொய்யாமொழி .

0

'- Advertisement -

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்டச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Ad banner

திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் . முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனக்கு வாக்களித்த வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் அசூர் பொய்கைகுடி தேநீர்பட்டி பழங்கனாங்குடி, பூலாங்குடி, எலந்தபட்டி, நவல்பட்டு, சூரியூர், அண்ணாநகர், கும்பக்குடி, அயன்புத்தூர், குண்டூர், சோழமாதேவி, திருவளர்ச்சிபட்டி, கிழக்குறிச்சி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாக்காளர்களைச் சந்தித்த வேட்பாளர் மகேஷ் தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

TVK ad

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் இந்த நன்றி அறிவிப்பு நிகழ்வில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

.இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன்,திமுக நிர்வாகிகள் சண்முகம், மாரியப்பன், பாலமுருகன், கயல்விழி சுதாகர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ளதாக கூறப்படும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனக்கும்,தனது கட்சிக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு இதுவரை நன்றி தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.