Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய்க்காக நிர்வாகிகள் சூறாவளி பிரச்சாரம்

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் அறிவுறுத்தலின் படி மலைக்கோட்டை பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் தலைமையில் கோவில் சீனு, காட்டூர் கதிர். வாளாடி ஆனந்த், போட்டோ விமல், ஈபி ரோடு சக்தி, கோவில் சீனி, முகுந்தன்

Ad banner

தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் நேற்று இறுதி கட்ட வாக்கு சேகரிக்கும் ஈடுபட்டனர். தமிழக அரசு கழக கட்சியின் தலைவரும் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான விஜய்க்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

 

TVK ad

திருச்சி கிழக்கு தொகுதி தற்போது நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது காரணம் நடிகர் விஜய் இத்தொகுதியில் போட்டியிடுவது தான் .

 

இந்த தொகுதியில் விஜய் நேரடியாக வீதி வீடாக சென்று வாக்கு சேகரிக்க இல்லாவிட்டாலும் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விசில் உடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள் அந்த வகையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் தமிழக வெற்றிக்கு கழக தலைவர் விஜய் அறிவித்துள்ள 10 உத்தரவாதங்களை பொது மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தனர்.

இந்த இறுதி கட்ட பிரச்சாரத்தில் இருசக்கர வாகனத்தில் கிழக்கு தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமான திரளாக சூறாவளி பிரச்சாரத்திற்கு ஈடுபட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.