ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்துகருப்பன்.நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி ?


வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திலே புகழ் பெற்ற தொகுதி ஸ்ரீரங்கம் தொகுதி தான்.. தொகுதியில் போட்டியிட்டு தமிழக முதல்வராக பணியாற்றியவர் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா .ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இத்தகுதிக்கு ஸ்டார் அந்தஸ்து உள்ளது .
தற்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் மனோகரன் போட்டியிடுகிறார்.மேலும் உச்சி வெயிலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி வடக்கு மாவட்டம் மணிகண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி . முத்துகருப்பன் ( சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்மந்தி திருச்சியை சேர்ந்த இன்ஜினியர் கலியபெருமாள் இருந்தபோது அதிமுகவில் இணைந்தவர்) சின்னம்மா சசிகலாவின் உறவினர் மற்றும் வைத்தியலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்.
கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகம் உள்ள உடையார் சமுதாய அதிமுக நிர்வாகிகளை ஜாதி பெயரை கூறி வசைப்பாடி வருகிறார் என கூறப்படுகிறது.
தற்போது அதிமுக வேட்பாளர் மனோகரன் கொடுத்த பணத்தை அதிமுக நிர்வாகிகளுக்கு கொடுக்காமல் பதுக்கி விட்டார் முத்து கருப்பன் என்றும் கூறப்படுகிறது .
தற்போது இவர் தனது பகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அதிமுக தொண்டர்களே புலம்பி வருகின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு இவர் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி ?

