Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக வேட்பாளர் இனிகோ தான் கூறியதை நிரூபித்தால் எங்கள் கவுன்சிலர் அம்பிகாபதி பதவியை ராஜினாமா செய்வார்.திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் காட்டம்

0

'- Advertisement -

வருகின்ற 23ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது .

Ad banner

இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது திருச்சி கிழக்கு தொகுதி.

இந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பில் ராஜசேகரன் ,

திமுக சார்பில் கிறிஸ்தவ நண்பனுக்கு தலைவர் இனிகோ இருதயராஜ் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஐந்து வருடங்கள் இந்த தொகுதியில் என்னென்ன செய்தேன் என ஏதாவது கூறி வாக்கு சேகரித்து வருகிறார் இனிகோ .(கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் மூலம் கிழக்குத் தொகுதிகளில் உள்ள சர்ச்சிகளுக்கு மட்டும் சென்று பங்குக்கு ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் என பல கோடி ரூபாய் செலவழித்து நம்பிக்கையுடன் உள்ளார்)

TVK ad

சனிக்கிழமை அன்று திருச்சி வயர்லெஸ் ரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட இனிக்கோ இருதயராஜ் இந்தப் பகுதியில் உள்ள ரோடுகள்,தெரு விளக்குகள் எனது முயற்சியால் எனது நிதியிலிருந்து போடப்பட்டது .இப்பகுதி மக்களுக்காக நான் பலத்திட்டங்கள் கொண்டு வந்துள்ளேன் என புருடா பேசி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் பிரச்சார மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் திமுக வேட்பாளர் இனிக்கோவின் பேச்சு சுத்தப் பொய் என்று கூறினார்.

மேலும் இனிகோ இருதயராஜ் வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் மின்விளக்குகள் தனது முயற்சியால் தனது நிதியில் செய்யப்பட்டது என்பதை நிரூபித்தால் இந்த வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி தனது பதவியை ராஜினாமா செய்வார். என பொதுமக்களிடையே பேசினார். (வயர்லெஸ் ரோடு மற்றும் இப்பகுதியில் உள்ள உயர் மின் விளக்குகள், தெரு விளக்குகள் அனைத்தும் நீண்ட காலங்கள் போராடி , மாமன்றத்தில் குரல் கொடுத்து போராடி வாங்கியது அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தான் என்பது குறிப்பிடத்தக்கது)

மேலும் உண்மையாக திருச்சி கிழக்கு தொகுதியில்  அனைத்து திட்டங்களும் வர மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய என்னை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர் என பேசினார்.

பிரச்சாரத்தின் போது திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ,முன்னாள் துணை மேருமான சீனிவாசன்,முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,கவுன்சிலர் அம்பிகாபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.