Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பிரச்சாரம் மாவட்ட செயலாளர்கள் மைதானத்தில் நேரில் பார்வையிட்டு ஆலோசனை

0

'- Advertisement -

எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பிரச்சாரம் .

 

Ad banner

உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு .

 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற 23–ந் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு,

அ தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று இரவு நாகை பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் திருச்சி வருகை புரிகிறார்.திருச்சிக்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது பிறகு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கி இரவு ஓய்வு எடுக்கிறார் பின்னர் காலை திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தேர்தல் பணி குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு சென்று அங்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை

ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி .

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (13 ந்தேதி) திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை தொடர்ந்து பொன்மலை ஜி கார்னர் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தனியாக மேடையில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மைதானத்தில் சிறிய மேடை அமைக்கப்பட்டு வருகிறது பிரச்சார வேனில் அங்கு வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திரண்டு இருக்கும் பொதுமக்கள் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது .

 

இதற்கிடையில்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் குமார்,

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

கூறியிருப்பதாவது:-

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை 13 ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 1 மணி அளவில் திருச்சி பொன்மலை ஜீ கார்னர் மைதானத்தில் பிரச்சாரம் செய்கிறார்.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் பொன்மலை ஜி கார்னர் பகுதியை திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் நாளை பிரச்சாரம் செய்வதை தொடர்ந்து அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.