Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாடிப்படியில் இருந்து மதுபோதையில் விழுந்த கூலித்தொழிலாளி பரிதாப சாவு.

0

'- Advertisement -

திருச்சியில்

Ad banner

மாடிப்படியில் இருந்து மதுபோதையில் விழுந்த கூலித்தொழிலாளி பரிதாப சாவு.

 

போலீசார் விசாரணை.

 

 

திருச்சி இ பி ரோடு ஜான்தோப்பு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 25 ) இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா (வயது 25 ) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். ஆனந்தராஜ் கல்கண்டார் கோட்டையில் உள்ள அரிசி ஆலையில் லோடுமேன் ஆக வேலை செய்து வந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து உள்ளார். இந்த நிலையில் இரண்டாவது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு படியேறி சென்ற போது அவர் மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.