வருகின்ற 23ஆம் தேதி பத்தாண்டு கால அடிமை விலங்கு உடைத்து மாற்றத்துக்கு தயாராகும் நாள்.திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் குமாரை ஆதரித்து பேசிய காளியம்மாள்
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாள் அவர்கள்

நேற்று (07.04.2026) மாலையில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகிலும்
தெற்கு காட்டூர் அருகிலும். கீழ கல்கண்டார்கோட்டை பகுதியிலும்..
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் ப.குமார் அவர்களை. ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி திருச்சி திருவெறும்பூர் தொகுதி மக்களின் பத்தாண்டு கால அடிமை விலங்கு உடைத்து மாற்றத்துக்கு தயாராகும் நாள் என பேசினார்
இந்த நிகழ்வின் போது அதிமுக திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி,பகுதி செயலாளர் பாஸ்கர்,அண்ணா தொழிற்சங்கம் கார்த்திக் , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தெய்வ மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சாந்தி கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக சரவணன், தமிழ் மாநில காங்கிரஸ் குணா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

