திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கை மாற்றி அமைத்து பொழுதுபோக்கு பூங்கா அமைப்பேன், திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் உறுதி
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் அரியமங்கலம் தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

வட்டம் – 36 ஜெகநாதபுரம்
அண்ணாநகர்
முந்துசெட்டிதெரு
ரத்தினசாமி தெரு
முதல்
பிள்ளையார் கோவில் தெரு
அண்ணா தெரு
முனீஸ்வரன் கோவில்
வரை
IOB பேங்க்
எம்ஜிஆர் நகர்
ஆண்டாள் நகர்
வட்டம் 36 A
ரயில் நகர் ராஜப்பாநகர்
கீழ அம்பிகாபுரம்
காந்திஜி தெரு
இந்திரா தெரு
மாஜி ராணுவ காலனி 4 ரோடு
மாஜி ராணுவ காலனி 17 முதல் 1 தெரு
வட்டம் 44 A
கணேசபுரம் ஆர்ச் 1 முதல் 9 தெரு
தங்கேஸ்வரி நகர்
ராஜீவ்காந்திநகர், இந்திராநகர்
காந்திதெரு
பாரதியார்தெரு
வெங்கடேசாநகர்
அல்லி தெரு
விவேகானந்தா நகர் விஸ்தரிப்பு.
இந்த பகுதி பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர் குமார் பேசுகையில்
அரியமங்கலம் குப்பை கிடங்கை மாற்றி அமைத்து பொழுதுபோக்கு பூங்கா அமைப்பேன்,
மேலும் இப்பகுதியில் சாலை வசதிகள் சரியில்லை என்ற பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என ப.குமார் வாக்குறுதி அளித்துள்ளார். எனவே தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பகுதி செயலாளர்கள் தண்டபாணி, பாலசுப்ரமணியன்மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் செயலாளர் கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, பகுதி அவை தலைவர் மீசை ஆறுமுகம் வட்ட செயலாளர்கள்கோபு, லட்சுமணன் ஆகியோர் இப்பகுதியில் நடைபெற்ற பிரச்சார ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.மேலும் கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக, அமமுக , தமாக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

