Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல் நாளே 3 மணி நேரம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காக்க வைத்த அமமுக மேற்கு தொகுதி வேட்பாளர் தொட்டியம் ராஜசேகர்

0

'- Advertisement -

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே என் நேருவை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முசிறியை சேர்ந்த தொட்டியம் ராஜசேகர் வேட்பாளராக களம் வாங்கி உள்ளார்.

Ad banner

அமைச்சர் நேருவை எதிர்த்து வெற்றி பெறுவார் என அனைவரும் நினைத்திருந்த நிலையில் இன்று திருச்சியில் வெக்காளியம்மன் கோவில் அருகில் இருந்து காலை 11.30 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது

இது என்ன தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்,முன்னாள் மாவட்ட உறுப்பினர் கதிரவன்,அதிமுக பகுதி செயலாளர் எம் ஆர் ஆர் முஸ்தபா உள்ளிட்ட பலர் காலை 11 மணி முதல் காத்திருந்தனர்.ஆனால் மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் தொட்டியம் ராஜசேகர் மதியம் 1.30 மணிக்கு தான் வெக்காளியம்மன் கோவிலுக்கு வந்தார்.பின்ன சாமி தரிசனம் செய்து 2 மணி அளவில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

 

TVK ad

மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே என் நேரு 11 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 10.50மணிக்கு அந்த நிகழ்ச்சிக்கு வந்து சென்று விடுவார்.அப்படிப்பட்ட வேட்பாளர் எதிர்த்து போட்டியிடுபவர் சரியான நேரத்துக்கு வந்தால் கூட பரவாயில்லை,மூன்று மணி நேரம் தாமதமாக வந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இல்லாமல் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிமுக, பாமக,உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களை மூன்று நேரம் காத்திருக்க செய்தது அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது .

 

இது திருச்சியில் 39 பத்திரிகையாளர்களா உள்ளனர்,. இவ்வளவு பத்திரிகையாளர்களை நான் பார்த்ததே இல்லை என வேட்பாளர் ராஜசேகரன் கூறியது அவர் தற்போதைய அரசியல்வாதியே இல்லை என்பதை தெரிவிக்கிறது.

 

தற்போதைய அரசியல்வாதிகளுக்கு அனைவருக்கும் தெரியும் திருச்சியில் எத்தனை பத்திரிகையாளர்கள் உள்ளனர் என்று .

இதை எதையும் அறியாத இவர் எப்படி மேற்கு தொகுதியில் பலமான அமைச்சர் கே என் .நேருவை எதிர்த்து போட்டி விட்டு வெற்றி பெறுவார் என தெரியவில்லை என் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகிகளே கூறுகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.