Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

1வது முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை.

0

'- Advertisement -

தமிழகத்தில் 1வது முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2025-2026 கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Ad banner

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 16-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

வகுப்பு வாரியான தேர்வு தேதிகள்:

1 வது முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு

ஏப்ரல் 8, 2026 தேர்வுகள் தொடங்கி

ஏப்ரல் 16, 2026 தேர்வுகள் முடிவடைகிறது.

 

4 வது மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு

ஏப்ரல் 6, 2026 தேர்வுகள் தொடங்கி

ஏப்ரல் 16, 2026 தேர்வுகள் முடிவடைகிறது.

 

6 வது முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு

ஏப்ரல் 1, 2026 தேர்வுகள் தொடங்கி

ஏப்ரல் 16, 2026 தேர்வுகள் முடிவடைகிறது.

 

தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதியோடு நிறைவடைவதால், மாணவர்களுக்கு ஏப்ரல் 17, 2026 முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், பள்ளி வளாகங்கள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட உள்ளன. இதைக் கருத்தில் கொண்டே ஏப்ரல் 16-க்குள் தேர்வுகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

2026-2027 புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் தொடங்கும் நாள் ஜூன் 1, 2026 (திங்கட்கிழமை) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 வது முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் மதிப்பீட்டுத் தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.