Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாவை பவுண்டேசன் சிறுவர் இல்லத்துக்கு சிவாஜி கணேசன் தலைமை மன்றம் சார்பில் அரிசி வழங்கும் விழா.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் உள்ள பாவை பவுண்டேசன் சிறுவர் இல்லத்துக்கு 100 கிலோ அரிசி வழங்கும் விழா.

Ad banner

மதுரை திருநகர் செவாலியே சிவாஜி கணேசன் தலைமை மன்றம் சார்பாக திருச்சி பொன்மலைப்பட்டி பாவை அறக்கட்டளை சிறுவர்கள் காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( 08.3.26) காலை 11.00 மணிளவில் திருச்சி சிவாஜி மக்கள் இயக்கம் தலைவர் திருச்சி எம்.சீனிவாசன் தலைமையில் ஏ.மோகன் பாலாஜி, ஜெ.முரளி, என்.கதிர்வேல், எஸ்.சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதுரை திருநகர் சிவாஜிகணேசன் மன்ற துணை தலைவர் எஸ்.சாமிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினரான மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் அவர்கள் மூலம் 100 கிலோ நயம் அரிசியை பாவை அறக்கட்டளை நிர்வாகி ஈஸ்வரனிடம் வழங்கப்பட்டது.               

இதில் திருச்சி சிவாஜி மக்கள் இயக்க நிர்வாகிகள்,பாவை அறக்கட்டளை சார்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.