Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு பயப்படாமல் ? அடி வாங்கிய நிருபர்கள் மீதே வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை.

0

'- Advertisement -

குளித்தலை அருகே சட்ட விரோதமாக கனிம வள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 நபர்கள் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளது சனிக்கிழமை தெரியவந்தது.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சிவாயம் வடக்கு கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வீதியை மீதி கனிம வள கொள்ளை நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து நியூஸ் தமிழ் திருச்சி மண்டல தொலைக்காட்சி செய்தியாளா் கதிரவன், ஒளிப்பதிவாளா் (வயது 45) எஸ்.செபாஸ்டியன் (வயது 47), சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு (வயது 50) வழக்குரைஞா் திருமலைராஜா (வயது 50) மற்றும் அவரது உதவியாளா் ராஜமாணிக்கம் (வயது 48) ஆகியோா் ஜன. 30-ஆம்தேதி குவாரி பகுதிக்குச் சென்று, டிரோன் கேமரா மூலம் விடியோ எடுக்க சென்றனர்.

அப்போது அவர்கள் சென்ற காரை வழி மறித்து எம்எல்ஏ பழனியாண்டி,அவரது மகன் விமலாதித்தன் (வயது 32) மற்றும் 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் அவர்களை ரத்தம் வர தாக்கினார்கள்.கேமரா மற்றும் லைவ் கிட் (Live kit) ஆகியவற்றையும் அடித்து நொறுக்கி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பழனியாண்டி இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடி கேமரா காட்சிகளை அப்போதே அழிக்க கூறிவிட்டார்.மேலும் தங்களது குவாரியில் பணி செய்யும் இரண்டு பேரை தங்கள் கைகளை கிழித்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் சேருங்கள்,நம்ம போலீஸ் ஸ்டேஷன் தானே குளித்தலை காவல் நிலையம் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறிய ஆடியோ வெளியானது.

 

இதனைத் தொடர்ந்து குவாரி பணியாளா்கள் செல்வம், மணிவேல், முருகேசன் ஆகியோர் கதிரவன் தரப்பினருக்கும் தகராறு நடந்ததாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் கதிரவன் அண்ணா என்ன தெரியலையா விட்டுவிடுங்கள் விட்டுவிடுங்கள் என கதறிய ஆடியோவும்,எம் எல் ஏ பழனியாண்டி கேமரா மூலம் அடித்த வீடியோவும் வெளியானது.

 

இந்த சம்பவம் தொடா்பாக குளித்தலை காவல்நிலையத்தில் குவாரி நிா்வாகம் தரப்பில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி (திமுக) மகன் விமலாதித்தன் தரப்பிலும், செய்தியாளா் கதிரவன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இருதரப்பினரின் புகார் மனுவையும் பெற்றுக்கொண்ட குளித்தலை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் பிப். 5-ஆம்தேதி, விமலாதித்தின் அளித்த புகாரின் பேரில் குவாரிக்குள் அத்துமீறி நுழைதல் 329(4), தட்டிக்கேட்ட தங்களை செய்தியாளா்கள் தாக்கியது 115(2), கொலை மிரட்டல் விடுத்தது 351(2) ஆகிய பிரிவுகளின் கீழும்,

 

செய்தியாளா் கதிரவன் அளித்த புகாரின்பேரில், செய்தி சேகரிக்கச் சென்றவா்களை எம்.எல்.ஏ. பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன் மற்றும் சிலா் அவதூறாக பேசி, மிரட்டி தாக்கியது 115(2), கொலை மிரட்டல் விடுத்தது 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் இந்த முதல் தகவல் அறிக்கையை கரூா் நீதிமன்றத்தில் போலீஸாா் இன்று திங்கள்கிழமை தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

விட்டு விடுங்கள் விட்டு விடுங்கள் என கெஞ்சி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிருபர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை காவல்துறை அதிகாரிகள் மிகவும் நேர்மையாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு பயப்படாமல் ?அடி வாங்கியவர்கள் மீதே வழக்குப் பதிந்து உள்ளது ஸ்காட்லாந்து போலீசுக்கு அடுத்தது நம்ம தமிழக காவல்துறை தான் என்பதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.