Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே.கே. நகர் பேருந்து நிலையம் அருகே எஸ்.பி.எஸ். பிரமாண்ட உணவகம் திறப்பு.ஸ்டார் ஹோட்டல்களை மிஞ்சும் வகையில் சுவையான உணவு வகைகள்.

0

'- Advertisement -

திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே புதிய எஸ்.பி.எஸ். சைவ அசைவ உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே எஸ்.பி.எஸ் சைவ, அசைவ உணவகம் மிகப் பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விதவிதமான சைவ அசைவ உணவு வகைகள் நிறைந்த தரத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மிக சுவையாக வழங்கப்படும். இந்த பிரம்மாண்ட எஸ்.பி.எஸ் சைவ, அசைவ உணவகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8.2.2026) முதல் செயல்படுகிறது. இந்த உணவகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தார்.

 

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ராக்போர்ட் டைம்ஸ் இதழின் முதன்மை ஆசிரியர் லெட்சுமி நாராயணன், புத்தூர் பகுதி வயலூர் ரோடு அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் காளிமுத்து, பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ராக்போர்ட் டைம்ஸ் இதழ் உதவி ஆசிரியரும் வி.எல். வித்யா திருமண மண்டப உரிமையாளருமான வி.எல்.நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

எஸ்.பி எஸ் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் முத்துசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

மேலும் விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைபபு மாநகர தலைவர் எஸ்ஆர்வி கண்ணன், மாநகர செயலாளர் பரணி பவன் உரிமையாளர் ஆறுமுகம், புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ராஜன், ஆனந்த், கண்ணன் வெங்கடேசன், தீனதயாளன், மலைச்சாமி மற்றும் வியாபார பெருமக்கள், தொழிலதிபர்கள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இங்கு தரமான சுவையான சைவ, அசைவ உணவுகள் ஆர்டரின் பெயரிலும் வழங்கப்படுகிறது.

இதே போல் எஸ்.பி.எஸ் உணவகத்தின் மற்றொரு கிளை திருச்சி புத்தூர் அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திறப்பு விழா சலுகையாக ஒரு பக்கெட் மட்டன் பிரியாணி வாங்கினால் அரை பிளேட் சிக்கன் பிரியாணி இலவசமாகவும், ஒரு பக்கெட் சிக்கன் பிரியாணி வாங்கினால் நான்கு சிக்கன் லாலிபப் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. என ஹோட் டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். முடிவில் எஸ் பி எஸ் ஹோட்டல் உரிமையாளர் சதீஷ் முத்துசாமி நன்றி கூறினார்.

இங்கு காலை டிபன் மற்றும் மதியம் அசைவ உணவுசாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் நம்மிடம் கூறிய போது காலை பூ போன்ற இட்லி மற்றும்  தோசைக்கு சாம்பார் சட்னி வகைகளுடன் மீன் பீஸ் உடன் மீன் குழம்பு,மதியம் பிரியாணி அதிக சிக்கன் பீஸ்களுடன் சாப்பிட மிகவும் சுவையாக தரமான வகையில் சுத்தமாக அன்புடன் பரிமாறப்பட்டது.நான் பல பெரிய ஓட்டல்களில் மற்றும் ஸ்டார் ஹோட்டல்களில் கூட சாப்பிட்டு இருக்கிறேன்சுவையாக இருக்கும் சாப்பாடுகள் சில நேரங்களில் வயிற்றுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் ஆனால் எஸ்பிஎஸ் உணவகத்தில் சாப்பிட்ட அசைவ உணவு வகைகள் வயிற்றுக்கு எந்த வித தொந்தரவும் ஏற்படுத்தவில்லை எனக் கூறினார்.எனவே கே கே நகர் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசதமாக எஸ்பிஎஸ் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.