Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

திருச்சியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்.

சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் சார்பில்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிராட்டியூர் வட்டார போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம் முன் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சுடர்வேந்தன், மாநில பொதுச் செயலாளர் ஜாகிர் உசேன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சபரிநாதன், தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன்,மாநில செயலாளர் பாலமுருகன், தண்டபாணி, சிங்காரம் மண்டல செயலாளர்கள் முரளி கிருஷ்ணன் அப்பாஸ், பாலமுருகன், ஷேக் தாவூத்,சேக் பரீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

போராட்டத்தில் திருச்சி மற்றும் தஞ்சை அரியலூர் பெரம்பலூர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பழைய வாகனங்களுக்கு எப்சி நேரத்தில் ஜிபிஎஸ் கருவியை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது அதனை அரசு செலவிலேயே பொருத்த வேண்டும்.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமுல்படுத்த படுவதை மாற்றி ஏப்ரல் 1 ஆம் தேதி வரை கால நீடிப்பு கொடுக்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் ஜூம் கார் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். சொந்த பயன்பாட்டுக் கார்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கஎடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.