திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து.7 பேர் மீது வழக்கு பதிவு.
திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து .
7 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு.
திருச்சி திருவரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (வயது 24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பழனி பாதயாத்திரை முடிந்து பிரசாதம் வழங்கும் நிகழ்வில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கரணை கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து கரணின் சகோதரர்கள் கமலேஷ், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனை அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அப்பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்டதால் இந்த கோஷ்டி மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கத்தி குத்தினால் படுகாயம் அடைந்த கரணை அவரது உறவினர்கள் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரபாகரன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து கரண் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன் மீதும் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் கரன் அவரது சகோதரர்கள்
கமலேஷ், மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீதும் திருவரங்கம் போலீசார் கரண் பிரபாகரன் உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

