Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் நேருவின் பெயரைக் கூறி கோடி கோடியாய் சம்பாதிக்கும் தேமுதிக பாரதியும் அவரது அக்கா வீட்டுக்காரர் மாத்தூர் கருப்பையாவும்.நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் சத்தரப்பட்டியில் அந்த மாவட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளருமான பாரதிதாசன் தனது அக்கா வீட்டுக்காரர் திமுகவை சார்ந்த மாத்தூர் கருப்பையா மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த பிரபல மணல் மாஃபியா எஸ் ஆர் எனப்படும் எஸ். ராமச்சந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டின் பெயரில் நடைபெறும் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.

Ad banner

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக, அதிமுக ,தேமுதிக முன்னணி நிர்வாகிகள் கட்சி பாகுபாடு இன்றி இந்த மணல் திருட்டில் ஈடுபட்டு வருவது பெரும் வருத்தத்துக்குரிய விஷயம்.

இந்த மணல் திருட்டு தேர்தலின் போது திமுகவுக்கு எதிராக தான் எதிரொலிக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

இதற்கு முன்பு அளந்தூர் பகுதியில் குளத்தை தூர் வருவதாக கூறி மூன்று அடி அள்ள வேண்டிய இடத்தில் 20 அடிக்கும் மேலாக வண்டல் மண்ணை அள்ளி திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மார்க்கெட்டில் கிராவல் மண்ணுக்கு பதிலாக பல அடி உயரங்கள் வண்டல் மண்ணை அடித்து மேலே அரை அடி கிராவல் மண் போடப்பட்டு பல அடி வண்டல் மண்ணையும் கிரவால் மண்ணாக கணக்கு காட்டப்பட்டு அதற்குரிய பணத்தை (பல கோடி என கூறப்படுகிறது) வசூல் செய்து உள்ளார் பாரதி என்னும் தேமுதிக சன்னாசிப்பட்டி பாரதிதாசன்.

 

TVK ad

இந்த மணல் திருட்டு மற்றும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருச்சி அமைச்சர் கே என் நேருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.ஏனென்றால் அமைச்சரின் அல்லக்கை என கூறி வருபவர் மாத்தூர் கருப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த மாத்தூர் கருப்பையா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட இடத்தில் இ சேவை மையம் அமைப்பதாக கூறி ஒரு அலுவலகத்தை வாடகைக்கு பெற்று பின்னர் அதன் பக்கத்து அலுவலகத்தையும் எக்ஸ்டெண் செய்து அந்த அலுவலகத்தில் மணல் காண்ட்ராக்ட் குறித்து ஆலோசனை மனம் மற்றும் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக பொங்கல் தினம் அன்று மணல் மாபியா புதுக்கோட்டை எஸ். ஆர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாத்தூர் கருப்பையா உடன் தனியாக அமர்ந்து டீலிங் முடித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. (மணல் ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகம் மாத்தூர் கருப்பையாவுக்கு அலுவலகம் ஒதுக்கியது எப்படி?)

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், திருச்சி மாவட்ட கல்குவாரி உதவி இயக்குனராரும் தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.