நூற்றாண்டுகள் கண்ட திருச்சி பொன்மலை பணிமனையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
அத்தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதன் நுழைவு வாயிலில் தபால் பெட்டி ஒன்று நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டது வருகின்றது.
சமீப காலமாக சிலர் அந்த தபால் பெட்டியை விளம்பர பதாகைகள் கொண்டு மறைத்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
மேலும் தரையில் வைக்கப்படும் பேனர்கள், சாலையின் பக்கவாட்டில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே, இரயில்வே நிர்வாகமும், தபால் துறையும் இதில் தலையிட்டு விளம்பர பதாகைகளை நெறிமுறைப்படுத்தி அத்தபால் பெட்டியை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

