Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், ரத்தினவேல் சிறப்புரை.

0

'- Advertisement -

திருச்சியில் 9 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி முதல்வராவது உறுதி :

அதிமுக கூட்டணி வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

அதிமுக பொதுக்கூட்டத்தில் சீனிவாசன்,ரத்தினவேல் பேச்சு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் உறையூர் குறத்தெருவில் நடந்தது. மாணவரணி மாவட்ட பொருளாளர் சோமு தலைமை வகித்தார்.

மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்து பேசுகையில்:-

திமுகவின் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில், இத்தொகுதியின் எம்எல்ஏ, நகராட்சிநிர்வாகத்துறை அமைச்சராக இருந்து திருச்சியில் சிறப்புத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. மாறாக, வரிகளை உயர்த்தியதும், மின் கட்டணத்தை உயர்த்தியதும் தான் அவர்களது சாதனை.

வரும் சட்டசபை தேர்தலில் மாநகரில் உள்ள 2 தொகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள 9 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று பழனிசாமி முதல்வராவார்’’, என்றார்.

அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் பேசுகையில்,‘‘மொழிப்போராட்டத்தை துாண்டியதால் தான் 1967ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. திமுகவோ, கருணாநிதியோ தமிழுக்காக எதையும் செய்யவில்லை. மாறாக, தமிழ் பல்கலைக்கழகம், அறிஞர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள், உலகத்தமிழ் மாநாடு என தமிழுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான்.

அதனால், மொழிப்போர் தியாகிகள் தினம் கொண்டாட தகுதியான ஒரே இயக்கம் அதிமுக தான். அவர்கள் வரிசையில் வந்த எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக தகுதி படைத்தவர். அதற்கான, வலுவான கூட்டணியை அமைத்துள்ளார். ஆனால், திமுக கூட்டணியில், திமுகவின் பெரியண்ணன் அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆட்சி, அதிகார பங்கு என காங்கிரஸ் கலகக்குரல் எழுப்பி வருகிறது. எனவே, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’’, என்றார்.

கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார் , அதிமுக இளம் பேச்சாளர் டாக்டர் சூர்யா உள்ளிட்டோர் பேசினர்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,இளைஞர் அணி ரஜினிகாந்த்,சிறுபான்மை பிரிவு அப்பாஸ்,தொழிற்சங்கம் ராஜேந்திரன்,

பகுதிச் செயலாளர்கள் புத்தூர் ராஜேந்திரன், கருமண்டபம் சுரேந்தர்,மலைக்கோட்டை சிந்தை முத்துக்குமார், எம்.ஆ.ஆர்.முஸ்தபா,வாசுதேவன்,ஏர்போர்ட் பகுதி வெங்கட் பிரபு,

ஜெயலலிதா பேரவை இன்ஜினியர் ரமேஷ்,மாணவரணி வழக்கறிஞர் சேது மாதவன்,

தலைமைக் கழக பேச்சாளர் ஆரி,இளைஞர் அணி டி.ஆர். சுரேஷ் குமார்,

சிங்காரவேலன்,கல்லுக்குழி முருகன்,பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல்,எம்.ஜே.பி வெஸ்லி,தென்னூர் ஷாஜகான்,வினோத்குமார்,கார்த்திகேயன்,ராஜாளி சேகர்,சந்திரசேகரன்,ஜமீலா,ஜெயந்தி சிவா,கணேசன்,வண்ணார்பேட்டை ராஜன்

உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.