ஶ்ரீரங்கத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் கைது,ஒருவருக்கு வலை.
திருச்சி ஸ்ரீரங்கம் சக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23. ) இதே போன்று
ஸ்ரீரங்கம் சிங்க பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்கி என்கிற ராமச்சந்திரன் (வயது 22. ) கஞ்சா ரவுடி.
அதே பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 24) இவரும் சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் உள்ளார்.மேலும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் நண்பர்களான இவர்கள் நான்கு பேரும் வெங்கடேசன் வீட்டில் வைத்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது வெங்கடேசனுக்கும், மற்ற மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விக்கி,மாதேஷ், ஸ்ரீனிவாசன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்து எட்டி உயரத்தில் இருந்து பள்ளத்தில் தள்ளி விட்டனர் இதில் அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கி, மாதேஷ் ஆகிய இரண்டு ரவுடிகளும் கைது செய்யப்பட்ட உள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சினிவாசனை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனது வீட்டில் நண்பர்கள் என மது அருந்த அழைத்து மது போதையின் காரணமாக வாலிபரை கொலை செய்ய வேண்டும் என்ற சம்பவம் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

