Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் கவலைக்குரிய நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் . ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வேதனை.

0

'- Advertisement -

சிகிச்சைக்கான‌ முழு தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் .

 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ்

வெளியிட்டுள்ள

செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் மூலம் மாதம்தோறும் ரூ.300 பிடித்தம் செய்யப்படுகிறது.

 

இந்த திட்டத்தை அரசு தனியார் துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்துள்ளது.

 

இந்த திட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நிலை கவலைக்குறியதாக உள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்லும் போது சுமார் ரூ.6,00,000 லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவரிடம் பணம் பறிக்கும் வகையில் சரியான கிளைம் தொகைகளை பெற்றுத்தராமல் மெத்தனம் காட்டுகின்றனர்.

 

மேலும் இவர்களின் செயல்பாடுகள் சரியானதாக உள்ளதாகவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ காப்பீட்டுத்துறை தான் காலதாமதம் செய்கிறது, சிகிச்சை தொகைகளை முடிவு செய்து அனுப்புகிறது என்று கூறுகிறார்கள்.

 

ரீ கிளைம்

செய்தால் ஒரு வருடமாகியும் இன்னும் பலருக்கு சிகிச்சைக்கான பணம் வழங்கவில்லை.

ஓய்வு பெற்றவர்களின் நிலை இன்னும் மிக மோசமாக உள்ளது.

 

கரூவூலம் மற்றும் அவர்கள் சார்ந்த அலுவலகம் என அலைகழிக்கப் படுகிறார்கள்.

எங்கு சென்றாலும் சரியான தீர்வு கிடைக்கவில்லை

ஏன் இந்த அவல நிலை அரசு ஊழியர்‌கள், ஆசிரியர்கள் அவசர சிகிச்சை மேற்கொள்ள உரிய தொகை முழுவதையும் உரிய காப்பீட்டு நிறுவனம் அளித்திட மறுப்பதால் மிகுந்த பண‌ நெருக்கடியை சந்திக்கின்றனர்.

பணியாற்றும் போதும், ஓய்வூக்கு பிறகும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக உள்ளது .

ஆகவே அரசு இதனை நேரிடையாக ஏற்று நடத்த வேண்டும்.

இல்லை என்றால் சிகிச்சைக்கான‌ முழு தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க அரசு உத்தர விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.