14 வயது மாணவியை பலாத்காரம் செய்த திருச்சி வட்ட செயலாளர் காளை போன்ற மிருகங்களை திமுக தன் கூடாரத்திற்குள் தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறது? வானதி சீனிவாசன் கண்டனம்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“திருச்சி திமுக வட்டச் செயலாளர் காளை உள்ளிட்ட 15 பேரால், 14 வயது சிறுமி ஒருவர் தொடர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகவும், அக்கொடூரத்தின் வினையாக அக்குழந்தை ஒரு குழந்தையை பெற்றெடுத்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
பள்ளிப்படிப்பைக் கூட தாண்டாத ஒரு பெண் குழந்தையை தங்களின் பாலியல் இச்சைக்கு பலியாக்கிக் கொண்ட அந்த மிருகங்களை இத்தனை ஆண்டுகளாக பாதுகாப்பாக அடைகாத்து வந்த திமுக அரசு தமிழகத்தின் அவமானச் சின்னம்.
பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மிதக்கிறார்கள், பள்ளி மாணவிகள் பாலியல் கரங்களில் சிக்கி சீரழிகிறார்கள், தமிழகப் பிள்ளைகள் தன்னை அப்பா என்றழைப்பதாக உருகும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது பிள்ளைகளை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா?

சென்னை ஞானசேகர், அரக்கோணம் தெய்வச்செயல், திருச்சி காளை போன்று பெண்களைக் குறிவைத்து வேட்டையாடும் இன்னும் எத்தனை மிருகங்களை திமுக தன் கூடாரத்திற்குள் தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறது?

