மிரட்டி அராஜகத்தில் ஈடுபடும் ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கூட்டணி கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் குமார்.
மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்டணி கட்சி திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளரே மக்கள் நீதி மய்ய சுவர் விளம்பரத்தை அழிக்கும் அவலம்.
மக்கள் நீதி மய்யத்தின் 9-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் சுவர் விளம்பரம் செய்து வருகிறோம். இதின் ஒரு பகுதியாக B.G.நாயுடு ஸ்வீட் எதிரில் இன்று 9.01.2026ந் தேதி சுவர் விளம்பரம் முழுவதும் எழுதிய பிறகு. திமுகவின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் மேற்படி சுவர் விளம்பரம் அவருடைய அலுவலகத்திற்கு அருகில் இருப்பதால் எழுதியதை அழிக்க சொல்லி ஓவியர்களை மிரட்டியதோடு, விளம்பரத்தை அழித்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் எதிர்கட்சி தலைவர் இருமாதத்திற்கு முன்பு ஸ்ரீரங்கம் வந்த பொழுது ஸ்ரீரங்கம் மேம்பாலம் இருபுறமும் எழுதிய சுவர் விளம்பரம் இன்றும் உள்ளது.

எதிர்கட்சி விளம்பரமெல்லாம் பகுதி செயலாளர் கண்ணை உறுத்தாமல். கூட்டணி கட்சிகாரர் விளம்பரம் இவர் கண்ணை உறுத்த காரணம் என்ன…?
எனவே திமுக தலைமை மக்கள் நீதி மய்யத்தின் சுவர் விளம்பரத்தை அழித்து அராஜகத்தில் ஈடுபட்ட பகுதி செயலாளர் ராம்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன் வக்கீல்
.S.R.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

