Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கார் விபத்தில் திருச்சி வழக்கறிஞர் பரிதாப பலி.

0

'- Advertisement -

திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.

திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (வயது 28), வழக்குரைஞா்.

இவா், நேற்று சனிக்கிழமை காலை திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டாா்.

இவருடன் தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி திருச்சி கிளை மண்டல மேலாளா் திவ்யா (வயது 25) பயணம் செய்தாா்.

இவா்களது காா் பகல் 12 மணி அளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் அருகே சென்றது. அப்போது, முன்னால் சென்ற லாரி மீது காா் மோதாமல் இருக்க சஞ்சய் பிரேக் பிடித்து காரை திருப்ப முயன்று உள்ளார்.இதில், கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் இடது பக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த திவ்யா காயமின்றி தப்பினாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பூா் காவல் நிலைய போலீஸாா் சஞ்சய் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.