புதுக்கோட்டை, திருச்சியில்
மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்கிறார். பிறகு திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவை வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசுகிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதையொட்டி அந்தமான் தீவக ளின் தலைநகர் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான விமானம் மூலம் புறப்பட்டு நாளை 4ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு வருகி றார்.
திருச்சி விமான நிலையத்தில் இறங்கியது அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு புதுக்கோட்டைக்கு செல்கிறது. புதுக்கோட்டை, பாலன் நகர், கருவேப்பிலான் கேட் பகுதியில் அமைக்கப்பட்
டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரை இறங்குகிறது.
பிறகு அங்கிருந்து மாநில காரில் புறப்பட்டு ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பிலான தமிழக பாரதிய ஜனதா கட்சியின்
தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தும் யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம் மேடைக்கு செல்கிறார்.பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். பிறகு அமித்ஷா பேசி முடித்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சிக்கு வருகிறார். இரவு 8 மணி
திருச்சி கலெக்டர் அலுவ லக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இரவு ஓய்வு எடுக்கிறார்.
நாளை மறுநாள் 5ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி
அளவில் தனியார் ஓட்டலில் இருந்து காரில் புறப்படும் அமித்ஷா தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு மீண்டும் தனியார் ஓட்டலுக்கு வருகிறார்.
அங்கு சுமார் ஒரு மணி நேர ஓய்விற்கு பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பங் கேற்கிறார்.
மதியம் 1.05 மணிக்கு அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கார் மூலம் புறப்பட்டு செல்கிறார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து 1.20 மணிக்கு ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு புறாப் பட்டு செல்கிறது.
திருச்சி மற்றும புதுகையில்பலத்த பாதுகாப்பு.
மத்திய மந்திரி அமித்ஷா வருகையை முன்னிட்டு அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பான இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர் செல்லும் வழித்தடங்கள் ஹெலிபேடுகள் மற்றும் அமித்ஷா செல்லும் சாலை பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் இருந்து மத்திய சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் அதிகாரிகள் வருகை தர உள்ளனர். இவர்கள் திருவரங்கம் ரங்கநாதர் கோவில் பகுதி மற்றும் திருச்சி விமான நிலைய பகுதி மற்றும் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெறும் விழா மேடை உள்ளிட்டவை பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து இருக்கிறார்.
மோடி பொங்கல் விழா ஏற்பாடு:
நாளை மறுநாள் ஐந்தாம் தேதி திருச்சி மன்னார்புரம் ராணுவத்தில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவிற்கான மைதான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது வருகிறது.மைதானத்தில் 1008 பெண்கள் பொங்கல் வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இங்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது.மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்துவிட்டு மத்திய மந்திரி அமித்ஷா அங்கு அமைக்கப்படுகிறார். மேடையில் பேசுகிறார்.மத்திய மந்திரி அமித்ஷா திருச்சி வருகையை முன்னிட்டு பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திருச்சி மற்றும் புதுகை மாவட்ட கலெக்டர்கள், மாநகர மற்றும் மாவட்ட போலீசார் பாதுகாப்பு வழங்க ஒத்துழைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று திருச்சியில் நாளை மறுநாள் 5ந்தேதி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு மோடி பொங்கல் விழா நடைபெறுகிறது. .இந்த விழாவிற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணியை மாநில பாஜக இணை செயலாளர் சிவசுப்பிரமணியம், திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

