அமைச்சர் கே.என்.நேரு செயல்பாட்டை முடக்க துடிப்பவர்களுக்கு எதிராக இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் இன்று அமலாக்க துறையை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம் .
இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பில் மக்கள் நலத்திட்டங்களை வழங்கிய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு செயல்பாட்டை முடக்கும் வகையில் பொய் வழக்கு போட துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும் அமலாக்க துறையை கண்டித்தும்,
சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமியர்களுக்கு
தமிழக அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநகர் மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா தலைமை தாங்கினார்.
இதில் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் .
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் வடலூர் பக்ருதீன் முன்னிலை வகித்தார்.
மாநில இளைஞரணி ஆரிபுல்லா,
புறநகர் மாவட்ட செயலாளர் முகமது இக்பால் ,தலைமை செயலாளர் சாதிக் கான், மாவட்டத் துணைச் செயலாளர் ஹபீப் முகமது ,மாவட்டச் செயலாளர் ஜாகிர் கான், துணைச் செயலாளர் முபின், பொருளாளர் முகமது முஸ்தபா, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறையூர் ஜாகிர், மஜீத், இப்ராஹிம், பாதுஷா,
சபீக் பகுதி நிர்வாகிகள் எம் இப்ராஹிம், சையது ரஹ்மான், இளைஞரணி அப்துல்லா, ஜவகர் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.

