Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தாங்கள் ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருந்து நடிகர் ஆகிவிட்டீர்கள் என்பது கரூர் சம்பவத்தில் நடித்த நடிப்பு, சிவாஜி உயிரோடு இருந்தால் பாராட்டி இருப்பார். எனவே நடிப்பை விட்டுவிட்டு, கொடுத்த வாக்குறுதியை ஃபாலோ பண்ணுங்க மகேஷ் பொய்யாமொழி. திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்.

0

'- Advertisement -

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே கொடுத்த வாக்குறுதியை ஃபாலோ பண்ணுங்க…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே .

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய பால்பண்ணை சாலைப் போக்குவரத்து சந்திப்பில் ஏற்படுகின்ற கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுங்கள் .

கடந்த 2016 முதல் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 2021 முதல் திரு.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றும் மகேஷ் பொய்யாமொழி அவர்களே, தேர்தல் சமயத்தில் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம்.

 

அதில் தீர்வு காணாமல் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்தீர்களா? தெரிந்து கொண்டீர்களா!! உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் அவர்களே …

நீங்கள் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தொகுதியை மாற்றிக் காட்டுகிறேன் வாக்குறுதி கொடுத்தீர்கள், தொகுதியில் பல்வேறு இடங்களில் கருணாநிதிக்கு சிலை நிறுவியும், உதயநிதிக்கு ரசிகர் மன்ற பதாதைகள் வைத்தும், தங்களுக்கும் தாங்கள் துதி பாடும் கருணாநிதி குடும்பந்தாற்கும், பிறந்த தினம் என்றால் தொகுதி முழுவதும் விளம்பர கட்அவுட்கள் வைத்து பொதுமக்களுக்கு இடையூற செய்து தொகுதியின் முகத்தை மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.

பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என்று 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் சர்வீஸ் சாலை அமைக்க பாடுபடுவேன் என்று எதிர்கட்சி அரசியல் செய்தீர்கள் .

2021 முதல் இன்று வரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும். முதல்வர் குடும்பத்திற்கு நெருக்கமாகவும் இருந்தாலும் நீங்கள் தொகுதி பிரச்சினைகளை கண்டு கொள்ளாத காரணத்தினால் மேற்கண்ட சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலை பொதுமக்கள் சந்திக்கின்றனர். குறிப்பாக பழைய பால்பண்ணை சந்திப்பை வாகனங்களும், பொதுமக்களும் கடப்பதற்கு சுமார் அரைமணி நேரம் விரயமாகிறது.

உங்களுக்கு வாக்களித்த திருவெறும்பூர் தொகுதி பொதுமக்களுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் பரிசு மன உளைச்சல், நேர விரயம். எரிபொருள் விரயம்.

திடீர் என்று கடந்த 23.12.2025 அன்று தங்களுக்கு ஞானோதயம் வந்து பழைய பால்பண்ணை சந்திப்பில் ஆய்வு செய்தீர்கள். பொதுமக்களை ஏமாற்றுவதற்கு தற்காலிகமாக மாற்றுவழி சொன்னீர்கள். தாங்கள் ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருந்து நடிகர் ஆகிவிட்டீர்கள் என்பதும் சமீபத்தில் கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜியோடு நடித்த நடிப்பு, சிவாஜி உயிரோடு இருந்தால் பாராட்டி இருப்பார்.

எனவே நடிப்பை விட்டுவிட்டு, நிரந்தர தீர்வு காண பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதற்கு எஞ்சிய காலத்திலாவது முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி.

பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும் ( எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆக இருந்த காலகட்டத்தில், இத்திட்டத்திற்கு ரூபாய்.450 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டது என்பதை தங்களுடைய அரசின் கீழ் பணியாற்றும் துறைசார்ந்த அரசு அலுவலர்களிடம் ஆலோசித்து தெரிந்துகொள்ளுங்கள்.)

துவாக்குடி வாழவந்தான்கோட்டை வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும்

அரைவட்ட சுற்றுச்சாலையை

அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என குமார் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.