Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

20 ஆண்டுகளில், வெள்ளி விலை 1,500%க்கும் மேல் அதிகரிப்பு.அப்போது முதலீடு செய்து இருந்தால் ….

0

'- Advertisement -

தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வருகிறது.தங்கத்தை போலவே நிச்சயம் வெள்ளி விலையும் உச்சம் தொடும் என்பதாலேயே மக்கள் ஆர்வமாக வெள்ளியில் முதலீடு செய்கிறார்கள்.

Ad banner

வெள்ளி முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவே வல்லுநர்களும் சொல்கிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வெள்ளியில் முதலீடு செய்திருந்தால்.. அவரிடம் இப்போது எவ்வளவு தொகை இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.. கடந்த 20 ஆண்டுகளில், வெள்ளி விலை 1,500%க்கும் மேல் அதிகரித்துள்ளதாம்..

TVK ad

ப்ளூம்பெர்க் தகவலின்படி 2005 டிசம்பர் 23ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ₹12,650ஆக இருந்தது. அப்போது நீங்கள் ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு 7.9 கிலோ வெள்ளி கிடைத்திருக்கும்.

இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளி விலை உச்சத்திற்குப் போய்விட்டது. இன்றைய தினம் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.44 லட்சமாக இருக்கிறது. அதாவது 7.9 கிலோவுக்கு ரூ.19.27 லட்சம் இருக்கும். அதாவது 20 ஆண்டுகளில் உங்களுக்கு ₹18,27,600 லாபம். அதாவது 1827% லாபமாகும்.

அதாவது நீங்கள் ரூ.10,000ஐ முதலீடு செய்திருந்தாலும் கூட அது கிட்டத்தட்ட ரூ.1.9 லட்சமாக மாறி இருக்கும்.

வெள்ளி விலை எந்தளவுக்கு உயர்கிறதோ.. அதே அளவுக்கு அது சரியவும் கூட வாய்ப்பு இருக்கிறதாம். சர்வதேச சந்தை, தொழில் தேவையைப் பொறுத்து ஒரேயடியாக 30% வரை கூட வெள்ளி விலை சரிய வாய்ப்பிருக்கிறது என்றும் அதை நிராகரித்துவிட முடியாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.