திருச்சியில் முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் மற்றும் மாவட்ட சிலம்பாட்ட கழகம் ஆகியவை இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு சிலம்பம் சமர் 2025 போட்டி சிறப்பாக நடைபெற்றது .
திருச்சியில் முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழகம் ஆகியவை இணைந்து ‘சிலம்பம் சமர்-2025’ போட்டிகளை திருச்சியில் கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடத்தியது .
முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு ‘சிலம்பம் சமர்- 2025’ போட்டிகள் கடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி அளவில் திருச்சி உறையூர், மேட்டுத் தெரு போலீஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது , ஆனால் எதிர்பாராத மழையின் காரணத்தினால் மைதானத்தில் மழைநீர் நின்றதால் அருகில் உள்ள இடத்தில் அரசு அனுமதி பெற்று போட்டிகள் நடைபெற்றது.
, திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ஏ.பூர்ண புஷ்கலா பங்கேற்று சிலம்பு போட்டிகளை தொடங்கி வைத்தார் .
மேலும்

இந்த நிகழ்வில் , பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கே.கே. ஒண்டிமுத்து, தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே.கே.செல்வகுமார், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், இணை செயலாளர் வழக்கறிஞர் பி. விஜய் நாகராஜன், பொருளாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் மற்றும் பலர் தலைமை மற்றும் முன்னிலை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினர் .
போட்டியில் மதுரை, சிவகங்கை, கோவை, செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிலம்ப வீரர்- வீராங்கனைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


குறிப்பாக 30 ‘டீம்’ தனித்திறன் போட்டியிலும், 10 ‘டீம்’ குழு போட்டிகளிலும் பங்கேற்றனர் .
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் தலைவர் பி.சரவணன், சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.

