திருச்சியில் இன்று கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பரிதாப சாவு
சமயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவதாசன் இவரது மனைவி செல்லம்மாள் (வயது 58) இவர் தனது மகனுடன் திருச்சி அருகே உள்ள கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். இன்று மதியம் 12 மணி அளவில் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில்
பழூர் அருகில் வரும் பொழுது திடீரென்று வந்த கார் எதிர்பார்க்காத நேரத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்திருந்த செல்லம்மாள் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் .
இந்த விபத்து சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையம் போலீசார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

