திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற 14,16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள போட்டி வெற்றி பெற்றவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது .
இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் இணைந்து 14, 16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான அஸ்மிதா (வீரமங்கை) தடகள தொடர்போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை (22.11.25 )திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில்,
மாவட்ட தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு, இணை செயலாளர் எம்.ரமேஷ், எம்.கனகராஜ் ஆகியார் முன்னிலையில் நடைபெற்றது .
போட்டியை ஒலிம்பியன் சுப்ரமணியன், திருச்சி விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்கள்.
சிறப்பு விருந்தினராக பனானா லீப் ஆர்.மனோகரன் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
60 மீ, 600மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்திய நாடு முழுவதும் 300 மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டு பள்ளி மாணவிகளை மையப்படுத்தி தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு,அதில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவிகள் தேசிய அளவிலான பயிற்சிமுகாமில் பங்கேற்க அனுப்பிவைக்கப்பட உள்ளார்கள்.
திருச்சி மாவட்ட தடகள சங்க செயற்குழு உறுப்பினர் எஸ்.ரெங்காச்சாரி நன்றியுரை ஆற்றினார்.

