திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களுடன் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் செயல்பட வேண்டும் . திருச்சியில் இன்று ஜி.கே.வாசன் பேட்டி.
எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் :
திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே பல்வேறு கட்சிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளன.

திருச்சியில் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் திருச்சி சங்கம் ஓட்டலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல் கொள்முதல் நிலையம் சரியாக செயல்படாத காரணத்தினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு சில நபர்களுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்..
தமிழ்நாட்டில் போதை பொருள் பழக்கத்தால் கலாச்சாரம் சீரழிந்து உள்ளது பல்வேறு பகுதிகளில் தொடர் குற்றம் நடைபெற்று வருகிறது.
சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவற்றை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில்
திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே பல்வேறு கட்சிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்கள் என்று நாங்கள் கூறலாம்.
தேர்தல் கூட்டணி தோல்வி பயத்தில்தான் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் எங்களுடன் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ்,மாவட்டத் தலைவர்கள் கே.டி.தனபால்,ரவீந்திரன்,மாநிலச் செயலாளர்கள் ராஜு, மதிவாணன்,மாநில இளைஞரணி செயலாளர் சிவ கணேசன்,மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம்,மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகர்,மாவட்ட பொருளாளர் சரவணன்,விவசாய அணி வயலூர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

