Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ரூ.1500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓக்கு 3 ஆண்டு சிறை .

0

'- Advertisement -

ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் பிச்சை என்பவரது பெயரில் ஆடு, மாடு கடன் பெற இருப்பிடச் சான்று, நிலத்துக்கான சிட்டா அடங்கல் பெற நடுப்பட்டி கிராம நிா்வாக அலுவலகத்தை பிச்சையின் மகன் தேக்கமலை கடந்த 2008-ஆம் ஆண்டு அணுகியுள்ளாா். அப்போது, கிராம நிா்வாக அலுவலராக இருந்த ராமரத்தினம் (75), சான்றுகள் வழங்க ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் தேக்கமலை புகாா் அளித்தாா்.

 

இதன்பேரில் போலீஸாா், தேக்கமலையிடம் ரூ.1,500 பணத்தை கொடுத்து கிராம நிா்வாக அலுவலரிடம் வழங்கச் செய்து, உரிய ஆவணங்களுடன் அவரைக் கைது செய்தனா்.

 

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புவியரசு, ராமரத்தினத்துக்கு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7-இன்படி பொது ஊழியா் சட்ட விரோதமாக பணம் பெறுதல் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

 

இதேபோல, மற்றொரு பிரிவில் பொது ஊழியா் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

 

இந்த வழக்கில், ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பிரசன்னவெங்கடேஷ், உதவி ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் சாட்சிகளை ஆஜா்படுத்தினா். அரசு சிறப்பு வழக்குரைஞா் கோபி கண்ணன் வாதிட்டாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.