ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி; சிட்டிங் எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் அதிருப்தி, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற போகுவது யார் என பார்ப்போம் …
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி; சிட்டிங் எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் அதிருப்தி, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற போகுவது யார் என பார்ப்போம் …
சென்னையின் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவை சார்ந்து கொண்ட தொகுதியாகும்.
தமிழகத்தில் 58 ஆண்டுகளாக வழக்கமான தொகுதிகளுள் ஒன்றாக இருந்த ஆர்.கே.நகர் (ராதாகிருஷ்ணன் நகர்), கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட்ட பிறகு, வி.ஐ.பி. தொகுதிகள் பட்டியலில் இடம்பிடித்தது.
தலைநகர் சென்னையில், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை என்று வடசென்னையின் முக்கியப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது ஆர்.கேநகர் சட்டமன்றத் தொகுதி.
சமூகம்…
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் நாடார், வன்னியர், பட்டியலின மக்கள், முஸ்லிம், கிறிஸ்துவர்களும், மற்றும் பிற சமுதாயத்தினரும் பரவலாக இருப்பதுடன், தெலுங்கு மொழி பேசும் மக்களும் கணிசமாக அளவில் வசித்து வருகின்றனர். மீனவர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளது. குடிசைப்பகுதி வாரிய வீடுகள் அதிகம் உள்ள தொகுதி ஆகும்.
பொருளாதார நிலை…
ஆர்.கே.நகர் தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் இல்லை; இங்கு வியாபாரம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பல பகுதிகளில் சாலைகள் குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டும் வெளியிடுகின்றனர்.
தொகுதியை பற்றி…
இந்த தொகுதியின் அரசியல் ரீதியிலான சிறப்பு என்பது மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் தனிக்கட்சி தொடங்கி அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத் தொகுதிகளில் திமுகவின் ஆதிக்கத்தைக் கடைசி வரை அவரால் அசைக்க முடியவில்லை. அவருக்குப் பின் வந்த ஜெயலலிதாவின் காலத்தில் சென்னையில் முதல் தொகுதியாக வெற்றி பெற்றது, இந்த ஆர்.கே.நகர் தொகுதியாகும்.
போட்டியாளர்கள்…
அதிமுக கோட்டையாக இருந்த தொகுதியை கடந்த தேர்தலில் தி.மு.க கைப்பற்றியது. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாக ஜே.ஜே.எபினேசர் வெற்றி பெற்றார். ஆனால் குடிநீர், சாலை வசதி, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளையும் இன்னும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. மேலும், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் இருப்பதாக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு உள்ளது.
சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் தொகுதி சார்ந்த மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், பகுதிசெயலாளர், வட்டசெயலாளர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் எபினேசர் மீது அதிருப்தியில் உள்ளதால், அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்படுகிறது.
திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர் செயல்பாடு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்று பொதுமக்கள் சொல்கின்றனர்.
திமுக சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் என்பவருக்கு வரும் தேர்தலில் சீட்டு கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. கடந்த தேர்தலில் எஸ்.ஜெபதாஸ் பாண்டியனுக்கும், எபினேசர் இடையே தான் சீட் கிடைப்பதில் கடும் போட்டி நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் வேட்பாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மருது கணேஷ் என்பவரும் தனக்கு போட்டியிட வாய்ப்புள்ளாத தெரிகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளரான ஆர்.எஸ்.ராஜேஷ்க்கு மீண்டும் சீட கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
மெகா சிட்டி திட்டம், வடசென்னை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் ஆர்.கே.நகருக்குப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டிருப்பதால், தற்போதைய நிலைமையில் ஆர்.கே.நகரில் தி.மு.கவிற்கு தான் சாதகமாக உள்ளது.