தனது தொகுதி பொதுமக்கள் நலன் கருதி கூட்டுறவு சங்கம் அமைக்க கோரி அமைச்சர் பெரியகருப்பனிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை.
திருச்சி காட்டூர் பகுதியில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும்
தனது திருவெறும்பூர் தொகுதி பொதுமக்கள் நலன் கருதி அமைச்சர் பெரியகருப்பனிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பனை
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காட்டூர் அதன் சுற்று வட்டாரத்தில், சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாமானிய குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் அன்றாட சேமிப்பதற்காகவும், நகை கடன் உதவிகள் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவிகரமாகவும், அப்பகுதியில் கூட்டுறவு சங்கம் அமைக்க ஆவண செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தார்.