Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தொழிலாளி வெட்டி கொலை. மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது.

0

'- Advertisement -

முன்விரோதம் காரணமாக

Ad banner

திருச்சியில் தொழிலாளி வெட்டி கொலை.

மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது

முன்விரோதம் காரணமாக

திருச்சியில் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மேலும் ரெண்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

TVK ad

இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

திருச்சி  மேல பஞ்சப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது36). இவரது தந்தை ராஜு (வயது 65, ) சகோதரர் கார்த்திக் (வயது32. ) இவர்கள் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 39) அஞ்சலை (வயது45) மற்றும் ராமமூர்த்தி (வயது26) ஆகியோர் இடையே பொதுபாதை பயன்பாடு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 29ந்தேதி ஜெயபால், அவரது தந்தை ராஜு மற்றும் அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோர் மாடுகளுக்கு இரு சக்கர வாகனத்தில் அந்த பொது பாதை வழியாக தண்ணீர் கொண்டு வந்தனர்.

 

 

அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், அஞ்சலை மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் ஜெயபால் கார்த்திக் மற்றும் அவரது தந்தை ராஜு ஆகியோரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் – இந்த நிலையில் தலையில் பலத்த வெட்டு காயமடைந்துமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் எடமலைப் பட்டிபுதூர் போலீசார் கொலை வழக்கு பதிந்து ராஜேந்திரன், அஞ்சலை மற்றும் ராமமூர்த்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாதவன், முருகானந்தம் அபி, சூர்யா சக்திவேல் குட்ட ஆறுமுகம் வெள்ளையம்மாள், தேவிகா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பாதை தகராறில் தொழிலாளி அருவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.