அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பற்றி அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒத்தக்கடை செந்தில் தலைமையில் திருச்சி கமிஷனரிடம் புகார் .
கடந்த ஆகஸ்ட் 19 8 2025 அன்று தனியார் youtube சேனலில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பற்றி திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியிருந்தார்.
இவர் மீது தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்து வந்த நிலையில்
இன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் முன்னாள் மாநகராட்சி மக்கள் கண்காணிப்பு குழு உறுப்பினரும் , முன்னாள் பீமநகர் மாரியம்மன் கோயில் அறங்காவலரும் , அதிமுக ஜங்ஷன் பகுதி பொருளாளருமான ஒத்தக்கடை செந்தில் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சமுத்திரம், திருச்சி எம் கே எம் ரபிக் , அம்மா பேரவை ஏகே ராம்குமார் , கடவுள் செல்வம் உள்ளிட்டோர் சென்று மனு அளித்தனர் .