எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணதால் திமுகவினர் அச்சம் . காவல்துறையை வைத்து விளம்பர தட்டிகளை கிழிக்கும் அவலம். திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் கடும் கண்டனம் .
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொது செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார் .
எடப்பாடி பழனிச்சாமி செல்வம் இடமெல்லாம் மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது .
தற்போது மூன்றாம் கட்டமாக திருச்சியில் வருகின்ற 23, 24,25 ஆகிய தேதிகளில் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார் . இதற்கான பணிகளை திருச்சி மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளுக்கு திருச்சி என்பது திருப்புமுனையாக அமையும் என்பதை உணர்த்தும் விதமாக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் , முன்னாள் துணை மேயர் சிறப்பாக முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அனைத்து கட்சி நிர்வாகிகளுடனும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார் , விதி வீதியாக சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை எழுச்சி பயணத்திற்கு நோட்டீஸ் அளித்து அழைப்பு விடுத்து வருகிறார் . திருச்சி மாநகர் முழுவதும் இப்போதே அங்கங்கே விளம்பர ப்ளக்ஸ் போர்டுகள் (முறைப்படி அனுமதி பெற்று ) எடப்பாடி பழனிச்சாமி வரவேற்று வைக்கப்பட்டுள்ளது . நேற்று இவை கிழிக்கப்பட்டுள்ளது .
இது குத்து திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் எழுச்சி பயணம் மேற்கொள்ள இருப்பதால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர் . இந்த நிலையில் பொதுச் செயலாளரை வரவேற்று விளம்பர போர்டுகள், சுவரொட்டிகள் ஒட்ட என அனைத்திற்கும் நாங்கள் முறைப்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அவர்களை நேரில் சந்தித்து முறைப்படி மனு அளித்து அனுமதி பெற்று தனியார் இடங்களில் மற்றும் சாலை ஓரங்களில் பிளக்ஸ்சுகள் அமைக்கப்பட்டது .
ஆனால் நேற்று காவல்துறையினரே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட், குட்செட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், கருமண்டபம், கேகே நகர் என பல்வேறு பகுதிகளில் அதிமுக பிளக்ஸ் பேனர்களை அகற்றி உள்ளனர்.
காவல்துறை மூலம் விளம்பர தட்டிகளை அகற்றுவது திமுகவின் பதட்டத்தை வெளிப்படையாக காட்டுகிறது .
முறைப்படி காவல்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று வைத்த பேனர்களை அகற்றுவது ஏன் என கேட்டதற்கு பழைய கோர்ட் ஆர்டரை காட்டுகிறார்கள் , ஆனால் திமுகவின் விளம்பர ( எந்த அனுமதியும் இன்றி வைக்கப்பட்ட ) தட்டிகளை அவர்கள் ஒரு போதும் அகற்றியது கிடையாது . இது கடும் கண்டனத்துக்குரியது .
- எந்த அனுமதி இன்றி திமுகவினர் வைத்துள்ள விளம்பர தட்டிகள் .
இந்த சம்பவம் குறித்து இன்று திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .