திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நிகராக அனைத்து நவீன வசதியும் கொண்ட மிகப்பெரிய பேருந்து நிலையமாக 38 ஏக்கர் பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் ரூ.408.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது திருச்சி பஞ்சபூர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் .
இந்த பேருந்து நிலையத்தை தொடக்கம் முதல் கட்டி முடிக்கும் பணியை அதிமுகவை சேர்ந்த புதுக்கோட்டை எஸ் ஆர் எனும் எஸ். ராமச்சந்திரன் . அனைத்து ஆற்றுகளிலும் மணல் அள்ளும் உரிமையைப் பெற்று பல ஆயிரம் கோடிகளை மணல் மூலம் சம்பாதித்தால் இவர்் மணல் ராமச்சந்திரன் என அழைக்கப்படுகிறார்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட உள்ள இடம் சாக்கடை குளமாக இருந்த இடம். இந்த இடத்தில் நான்கடி உயரத்திற்கு கிராவல் மண் அடிக்க டெண்டர் விடப்பட்டது . இந்த டெண்டர் பெற்ற எஸ் ஆர் மூன்றடி உயரத்திற்கு வண்டல் மண் அடித்து நிரப்பி மேலே ஒரு அடி மட்டும் கிராவல் மண் அடுத்து சமன் செய்தார் .( இந்த வண்டல் மண் திருச்சி மாவட்டத்தில் உள்ள உதாரணமாக குண்டூர். மணிகண்டம், திருவெறும்பூர் போன்ற குளங்களில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரின் அனுமதி உடன் இலவசமாக எடுத்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்ததை எஸ் ஆர் பல விவசாயிகள் மூலம் அந்த வண்டல் மண்களை இலவசமாக எடுத்து அதை கிராவல் மண் எனக்கூறி சாக்கடை குளத்தை நிரப்பி உள்ளார் )
ஆற்று மணலில் பல நூறு கோடி சம்பாதித்து திருச்சி பஸ் ஸ்டாண்ட் , அரியமங்கலம் குப்பைகிடங்கு என பல ஒப்பந்தங்கள் மூலம் பல கோடி சம்பாதித்த எஸ் ஆர் . தற்போது பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் நானே 300 ஆட்டோகளை ஒரே கலரில் இறக்கி எனது ஆட்கள் மூலம் திருச்சி முழுவதும் ஓட்டுகிறேன் எனக்கூறி திருச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே பிரச்சனையை ஏற்படுத்தினார் .
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளே கடைகளுக்கு சதுர அடி ரூ.400 முதல் ரு 475 மாத வாடகை வசூல் செய்வதும் இவர்தான் .( வாங்கி வருடங்களுக்கு தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கக்கூடாது என திருச்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி பேசிய போது மேயர் அன்பழகன் அமைச்சரிடம் கூறி ஒப்பந்த காலத்தை குறைக்க முயற்சி செய்கிறேன், ஆனால் 15 வருடங்களுக்கு கமிஷனைை பெற்றுக் கொண்டு எஸ் ஆர் இடம் கக்கூஸ் முதல் அனைத்து ஒப்பந்தத்தையும் பயந்து வருடங்களுக்கு தாரை வாத்து விட்டனர் )
பேருந்துகள் நிற்கும் இடத்தில் பத்து தூண்களுக்கு ஒரு இடத்தில் பெட்டிகள் அமைத்து டீ, பலகாரம் போன்ற வியாபாரங்கள் செய்வது இவரின் ஆட்கள்தான்.
இந்த நிலையில் இந்த கடைகளில் விலைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறி பயணிகள் பேருந்து வெளியில் உள்ள சாலையோர கடைகளில் டீ டிபன் போன்றவற்றை சாப்பிட்டு வந்தனர். இதனால் பேருந்து நிலையம் உள்ளே உள்ள கடைகளில் வியாபாரம் பாதித்ததாக நினைத்த எஸ் ஆர் அமைச்சர் நேருவிடம் கூறி உள்ளார் .
இதனை அடுத்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சபூர். பேருந்து நிலையத்தை சுற்றி சாலை ஓரங்களில் இருந்த வண்டிகளில் டீ டிபன் கடைகளை காவல்துறை பாதுகாப்பு உடன் மாநகராட்சி அதிகாரிகள் வண்டிகள் மற்றும் பெட்டிகளை வாகனங்களில் அள்ளி சென்று உள்ளனர் . இதனால் மனவேதனை அடைந்த வியாபாரிகள் முன்னதாக கூறியிருந்தால் எங்கள் பொருட்களை நாங்கள் எடுத்துச் சென்று இருப்போம் ஆனால் அமைச்சர் கூறி எங்களது பொருட்களுடன் எங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து இன்று நடுத்தெருவில் நாங்கள் நிற்கின்றோம் என வருத்தத்துடன் கூறியுள்ளனர் .