திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாபெரும் இரத்ததான முகாம்.
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் தனியார் பார்மசி , திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை திருச்சி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்.
உலக இரத்ததான கொடையாளர் தினத்தை முன்னிட்டு
வருகிற ஜூலை 17 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை புதிய நீதிமன்ற கட்டிடம் நான்காவது தளத்தில் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது .
அது சமயம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் கொடுத்து நிகழ்வினை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
கொடையாளர்கள் அனைவருக்கும் அங்கேயே அரசு மருத்துவமனை வழங்கும் சான்றிதழ் உடனே வழங்கப்படும்.
மேலும் நாம் வழங்கும் இரத்த தானம் ஆனது அரசு மருத்துவ மனையில் தற்போது மகப்பேறு பிரிவில் தேவைப்படும் மகளிர்களுக்கும் விபத்துகளில் ஏற்படும் ஏழை எளியவர்களுக்கும் மேலும் பல்வேறு சிகிச்சைகளுக்கு தேவைப்படும் இரத்தம் நாம் கொடுக்கும் இரத்த தானம் உதவும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இரத்ததானம் கொடுப்போம்
உயிரை காப்போம் உங்களின் உதிரம் ஒருவரை காப்பாற்றும் என்பதில் பெருமை கொள்ளுங்கள் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.