Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

4 பெண்களின் உதவியுடன் 8 வயது சிறுமியை போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் .

0

'- Advertisement -

வீட்டின் அருகே விளையாடிய 8 வயது சிறுமியை அழைத்து சென்று போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு: எஸ்ஐ மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார்

 

 

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு செய்ததாக உதவி ஆய்வாளர் ஒருவரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 32,) பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், எனது 8 வயது மகள் 4ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் அருகே நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்த மகள் திடீரென மாயமானார். அருகில் உள்ள பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் மகளின் தோழி காட்டிய வீட்டிற்கு சென்ற போது, ஒரு ஆண் மற்றும் 4 பெண்கள் இருந்தனர். அந்த வீட்டில் எனது மகள் இருந்தார். எனது மகளை வீட்டிற்கு அழைத்த போது, அவர்கள் அனுப்ப மறுத்துவிட்டனர். வீட்டில் இருந்த நபர் ‘உன் மகளை அனுப்ப முடியாது. நான் காவலர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறேன்’ என்றார். சிறிது நேரத்தில் போலீஸ் வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்தார்.

 

அதற்கு நான் மறுத்துவிட்டேன். அப்போது எனது மகளை அவர்களிடம் இருந்து மீட்டு விசாரித்த போது, என்னை மிரட்டிய காவலர் கையில் ஊசி ஏற்றினார். உடல் முழுவதும் வலிக்கிறது என்று கூறியபடி எனது மகள் மயங்கிவிட்டார். உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு மருத்துவ பரிசோதனையில் எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு நடந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் மீது ஆயிரம்விளக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் நபர், ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ராஜி என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியிடம் என்ன நடந்தது என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சிறுமிக்கு போதை ஊசி போடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.