உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு மசாஜ் ராணியிடம் சிக்கி சின்னாபின்னமான வயதானவர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள்.
தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் ஸ்பா சென்டர்கள், மசாஜ் சென்டர், சலூன்களில், பாலியல் தொழில் நடத்தப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல்கள் அடிக்கடி வருகின்றன.அப்படி வரும் தகவல்களின் அடிப்படையில் போலீசார் சோதனைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்..
இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் நடந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த சார்லஸ் ஒரு தொழிலதிபராவார்.. 50 வயதாகும் சார்லஸ், வாரத்திற்கு 2 முறை அண்ணாநகரில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்று வருவது வழக்கமாகும்.
அப்போது மசாஜ் சென்டரில் வேலைபார்த்து வந்த ஆன்ட்ரியா (எ) நிக்கி (வயது 38) என்பவருடன் நட்பாகியிருக்கிறார். ஆன்ட்ரியா உதவியுடன் இளம் பெண்களிடம் சார்லஸ் மசாஜ் செய்து வந்ததாக தெரிகிறது.
கடந்த மாதம் 28ம் தேதி, தனக்கு மசாஜ் செய்யும் பெண் வேண்டும் என ஆண்ட்ரியாவிடம் சார்லஸ் கேட்டிருக்கிறார். உடனே ஆன்ட்ரியாவும், ரேகா சாவித்திரி என்ற பெண்ணின் பெயரை சொல்லி, அந்த பெண்ணின் வீட்டு முகவரியையும் தந்துள்ளார். மறுநாள் 29ம் தேதி, சூளைமேடு சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
ரேகா சாவித்திரி என்பவரும் சார்லசுக்கு மசாஜ் செய்துள்ளார். பிறகு அவருடன் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது திடீரென கட்டிலுக்கு அடியிலிருந்து 2 ஆண்கள் வெளியே வந்து சார்லஸை கடுமையாக தாக்கியதுடன், அவரிடமிருந்த, 20 பவுன் நகைகள், காஸ்ட்லி வாட்ச், ஜி-பே மூலம் ரூ.40000 பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவத்தை சார்லஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனினும், இதுகுறித்து போலீசுக்கு சென்றால், தன்னுடைய மானம்தான் போகும் என்று நினைத்து விட்டுவிட்டார். ஆனால், அடுத்த சில நாட்களில், தொழிலதிபரின் மனைவி, அவரது நகைகள் எங்கே? என்று கேள்வி கேட்டுள்ளார்.
இறுதியில் நடந்த விஷயத்தை தொழிலதிபர் சொல்லவும், அதிர்ச்சி அடைந்த மனைவி, உடனே கணவரை அழைத்துக் கொண்டு, கடந்த 9ம் தேதி சூளைமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார் .
இந்த புகாரின்படி போலீசாரும் தனிப்படை அமைத்து, விசாரணையை மேற்கொண்டனர்.. தொழிலதிபரின் செல்போனிலிருந்து G-pay மூலம் ரூ.40000 பறித்த, நம்பரை வைத்து டிரேஸ் செய்யப்பட்டது. அப்போதுதான், சைதாப்பேட்டை நவீன்குமார் (வயது 26) என்பவருக்கு அந்த பணம் டிரான்ஸ்பர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அரும்பாக்கம் போலீசார் நவீன்குமாரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, இவருடைய உறவினர்தான் ரேகா சாவித்திரி. இவருக்கு 30 வயதாகிறது.. அவசர தேவைக்கு ரூ.500 நவீன்குமார் கடன் கேட்டாராம். அதற்கு ரேகா சாவித்திரி, ஒரு தொழிலதிபர் வீட்டுக்கு வருவதால், அவரை மிரட்டி பணம், நகைகளை பறித்தால் 1000 ரூபாய் தருவதாகவும் கூறியிருக்கிறார்.
உடனே நவீன்குமாரும், கோகுல கிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து, தொழிலதிபரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, தென்காசி செங்கோட்டையில் மறைந்திருந்த ரேகா சாவித்திரியை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, ரேகா சாவித்திரி போலீசாரிடம் தந்த வாக்குமூலத்தில், மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் ஆன்ட்ரியாவுக்கும் இதில் தொடர்பு இருப்பதும், ஆண்ட்ரியாவின் கணவர்தான் இந்த கோகுல கிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது..
இறுதியில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த ஆண்ட்ரியா, அவரது கணவன் கோகுல கிருஷ்ணனை அரும்பாக்கம் போலீசார் கைது செய்ததுடன், தம்பதியிடமிருந்து 114 கிராம் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ஆண்ட்ரியா கோவை காரமடை பகுதியை சேர்ந்தவர். கணவர் கோகுலகிருஷ்ணனுடன்(வயது 40) சேர்ந்து, சென்னையில் தங்கியிருக்கிறார். அண்ணாநகரில் ஒரு பிரபல மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். ஸ்பா சென்டரில் கஸ்டமர்கள் அனைவரும், ஆண்ட்ரியாவை ‘மசாஜ் ராணி’ என்றுதான் சொல்வார்களாம்.
இதுதான் ஆண்ட்ரியாவுக்கு சாதகமாக போயிற்று.. ஸ்பா சென்டருக்கு வரும் வசதியான நபர்களை குறிவைத்து அவர்களிடம் மெல்ல பேச்சு தந்து, நட்பாகிவிடுவாராம். அவர்களது செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டு, உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும் சொல்வாராம்.
ஆங்கிலோ இந்தியன் என்பதால் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய ஆண்ட்ரியாவின் அழகில் பலர் விழுந்து, லட்சக்கணக்கில் பணத்தை தொலைத்திருக்கிறார்களாம்.
இதற்கெல்லாம் ஆண்ட்ரியாவின் கணவர் கோகுலகிருஷ்ணன் உதவியாக இருந்து வந்துள்ளார். தொழிலதிபர்கள், வசதிபடைத்த வயது முதியவர்களுடன் உல்லாசமாக இருப்பதை, ரகசியமாக வீடியோவும் எடுத்து அதை சம்பந்தப்பட்டவர்களிடமே காட்டி இந்த ஜோடி பணம் பறித்து வந்ததும் அம்பலமாகியிருக்கிறது.
இதுவரை இந்த ஒன்றரை வருடத்தில் 50க்கும் மேற்பட்ட வசதி படைத்தவர்களிடம் பணத்தை கொள்ளையடித்துள்ளனராம் இந்த தம்பதி. இதைத்தவிர ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மட்டும் 30-க்கும் அதிகமானோர் அடக்கம்.சமூக அந்தஸ்து காரணமாக, யாருமே இதை பற்றி வெளியே சொல்லாமல் இருந்து வந்தது, ஆண்ட்ரியாவுக்கு சாதகமாக போயிற்று.
இதற்கு உறவினரான ரேகா சாவித்திரியும் உதவி வந்திருக்கிறார். ஆனால், ஆண்ட்ரியா என்ற பெயரை வைத்து, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பெயரை சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். இப்போது இதுவரை எத்தனை ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், வயதானவர்களை குறி வைத்து பணத்தை பறித்துள்ளார் ஆண்ட்ரியா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்களாம் .