திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்ல வந்த பெண்ணிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி. போலீசார் துருவி துருவி விசாரணை
திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல இருந்த
பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்தார். அப்பொழுது திருச்சி விமான நிலையத்தில் அவருடைய உடமைகளை அங்கிருந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது அவருடைய உடைமையில் ஜிபிஎஸ் கருவி இருந்துள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்தனர். விமானத்தில் ஜிபிஎஸ் கருவி எடுத்துச் செல்ல தடை உள்ள நிலையில் அந்த ஜி பி எஸ் கருவியை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து ஏர்போர்ட் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விமான நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து அந்த பெண்ணிடம் ஜிபிஎஸ் கருவியை எதற்காக விமானத்தில் கொண்டு செல்ல இருந்தார் என்பது குறித்து அந்த பெண்ணிடம் போலீசார் துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர்.
இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.