தமிழகத்திலேயே முதல் முறையாக எந்த மாமன்ற உறுப்பினரும் ( ஆளும் கட்சியினர் கூட) செய்யாததை செய்யும் திருச்சி 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன்.
தமிழகத்திலேயே முதல் முறையாக எந்த மாமன்ற உறுப்பினரும் செய்யாததை செய்யும் திருச்சி 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன்.
திருச்சி மாநகராட்சி 14வது வார்டில் பொதுமக்கள் தங்கள் குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் ஏற்பாட்டில் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நேற்று (22 ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு வாரமும் 14வது வார்டுக்கு உட்பட்ட இரண்டு தெருக்களில் உங்களுடன் நான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் அந்த இரண்டு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிமுக கவுன்சிலர் அரவிந்தனை சந்தித்து தங்கள் தெரு பகுதிக்கு வேண்டிய வசதிகளையும்,
குறைகளையும் மனுக்களாகவோ, அல்லது நேரில் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இனி ஒவ்வொரு வாரமும் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப இரண்டு தெருக்கள் வீதம் தொடர்ந்து ஒவ்வொரு வாரம் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு வாணபட்டறை தெரு, புது தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்த 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் நேரில் சென்று மக்களோடு மக்களாக அமர்ந்து குறைகளை கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து பொதுமக்கள் கூறிய புகார்களையும் , அந்த தெருக்களில் உள்ள குறைகளையும் கேட்டறிந்த கவுன்சிலர் அரவிந்தன் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய உறுதி அளித்தார்.
வரும் வாரங்களில் தனது வார்டில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து பொதுமக்களுக்கும் அவர்களின் குறைகளை மாநகராட்சி அதிகாரிகளின் துணையோடும் தன்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடிந்த உதவிகளையும் செய்ய உள்ளதாக உறுதி அளித்தார்.
நேற்று இரண்டு தெருவில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்களது குறைகளை கூறி மனுக்கள் அளித்துள்ளதாக அரவிந்தன் கூறியுள்ளார் .
தமிழகத்திலேயே எந்த மாமன்ற உறுப்பினரும் குறிப்பாக ஆளுங்கட்சியினர் கூட செய்யாததை செய்து வரும் கவுன்சிலர் அரவிந்தனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .